Tuesday, October 28, 2014

உயர் நிலை யோகம் பயிலப் பயில, உள்ளே உயிர் ஊறக் கண்டேன்!

Athletics, weight training, parallel bars... yeah I love everything. But WHAT YOGA DOES IS MAGIC!  The internal feel you get after yoga processes, yoga only gives it!
 
உயர் நிலை யோகம் பயிலப் பயில
உள்ளே உயிர் ஊறக் கண்டேன்!
உள் உறுப்புகள் மகிழக் கண்டேன்.
சிந்தைக் குளிரக் கண்டேன்,
சினம் மறையக் கண்டேன்.
கண் திறக்கும் போது காட்சிகள் புதிதாய் தெரியக் கண்டேன்.
மூச்சு தானாகவே சரியாகி,
மனம் இலகுவாகி மலரும் அற்புதங்கள் நிகழக் கண்டேன்.
இறகுபோல் இலகுவாய் உணர்கிறேன்.
இருதயம் இன்னும் சீராய் துடிப்பதாய் அறிகிறேன்.
இப்படியே போனால் இருபது வயது குறைந்து விடுவேன்!
மகோன்னத யோகாவை மனித குலத்திற்குத் தந்த இந்தியாவே...
தலை வணங்குகிறேன்.
-பரமன் பச்சைமுத்து